திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

Update: 2022-01-15 22:00 GMT

திருவள்ளுவர் சிலை.

முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே உலக பொதுமறை நாயகன் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக தை திருநாளின் மறுநாள் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று பண்பாளர்கள் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் வழிபடுவர்.

இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை விதித்து உள்ள அரசு திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தையும் நிறுத்தியது. இந்நிலையில் திருவள்ளுவர் தினமான இன்று குமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை விமரிசை காணாமல் களையிலந்து காணப்பட்டது.

Tags:    

Similar News