குமரி: சிறுத்தை புலி நடமாட்டத்தால் வெறிச்சாேடிய முக்கடல் அணை பூங்கா

குமரியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டு சிறுத்தை புலி நடமாட்டத்தால் வெறிச்சாேடி காணப்படும் முக்கடல் அணை.

Update: 2021-12-27 13:30 GMT

நாகர்கோவில் அருகே திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள முக்கடல் அணை பூங்கா.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது முக்கடல் அணை. நாகர்கோவில் மாநகரில் உள்ள இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கான தண்ணீர் இந்த அணையில் இருந்து தான் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் கொண்டு செல்லப்படுகிறது.

குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் இந்த அணையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே நீண்டகாலமாக அணையின் சுற்றுவட்டாரப் பகுதி பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பொழுது போக்கு பூங்கா, சினிமா படப்பிடிப்பு தளம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு சுற்றுலா தளம் போல் முக்கடல் அணை மாற்றம் செய்யப்பட்டது.

நாகர்கோயில் மாநகராட்சியின் இந்த திட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு சுற்றுலா பகுதி உருவானது என்ற மகிழ்ச்சி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முக்கடல் அணை பூங்கா பகுதியில் தொடர்ந்து சிறுத்தை புலி நடமாட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை புலியை பலமுறை கண்டதோடு இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்த நிலையில் சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் இது வரை சிறுத்தை புலி பிடிக்கப்பட்ட வில்லை, இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டதால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வராததால் முக்கடல் அணை ஆள் ஆரவாரம் இன்றி மயான அமைதியாக காட்சியளிக்கிறது.

Tags:    

Similar News