ஐயப்ப பக்தர்களால் களைகட்டிய கன்னியாகுமரி.

ஐயப்ப பக்தர்களால் வருகையால் நீண்ட நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரி களை கட்டியது

Update: 2021-12-02 04:30 GMT

ஐயப்ப பக்தர்கள் வருகையால் களைகட்டிய குமரி


உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் அங்கு கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் வானுயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா சொகுசு படகில் சென்று ரசிப்பதோடு, கடற்கரை, குமரியின் ரம்மியமான இயற்கை காட்சிகளையும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தம காட்சிகளை ரசிப்பார்கள்.

அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளால் கன்னியாகுமரி களைகட்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த பல நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிக்க மற்றும் அய்யப்ப பக்தர்கள் வருகையின்றி கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் சுற்றுலா தளத்தை நம்பி வாழும் வியாபாரிகளும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில் மழை நின்றதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளத்தோடு கன்னியாகுமரி சுற்றுலா தளம் களைகட்டி உள்ளது.

மேலும் கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் பாசி, சங்கு உள்ளிட்ட விற்பனையும் அதிகரித்து உள்ளது, இதனிடையே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Tags:    

Similar News