மண்டைக்காடு கோவில் தீவிபத்து - தேவபிரசன்னத்தில் கூறியும் அலட்சியப்படுத்திய நிர்வாகம்.

மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் கேராளாவை சார்ந்த ராஜேஷ் போத்தி, கண்ணன் நாயர் பார்த்த தேவபிரசன்னத்தில் தீ விபத்து ஏற்படும் என தெளிவாக கூறினார்களாம்.

Update: 2021-06-03 12:26 GMT

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீவிபத்து கோவி்ல் நிர்வாக அலடசியம் தான் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆகம விதிப்படி கோயில் பூஜைகள் தடையில்லாமல் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பாகும்

பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்றுகாலை 6.30 மணிக்கு பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. பின்னர் கோயில் குருக்கள் கருவறையை விட்டு வெளியே வந்தனர். சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது. தீ எரிவதை பார்த்த அப்பகுதி பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் மற்றும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் கோயில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இதையடுத்து கோயிலுக்குள் இருந்த பூஜைப் பொருட்கள் மீட்கப்பட்டன. புற்று வடிவிலான மூலவர் அம்மனுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.


இந்நிலையில் கடந்த 22.07.2018 ம் தேதி அன்று மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் கேராளாவை சார்ந்த ராஜேஷ் போத்தி மற்றும் கண்ணன் நாயர் ஆகியோர் பார்த்த தேவபிரசன்னத்தில் தீ விபத்து (அக்னிஉபாதை) ஏற்படும் என தெளிவாக சொன்னதாகவும் ...அதன் பின்னரும் திருக்கோவில் நிர்வாகம் பரிகாரம் செய்யாமல் அலட்சியம் செய்ததாக பக்தர்கள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News