வரிசையில் நின்று வாக்களித்தார் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர்

கன்னியா குமரியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Update: 2022-02-20 03:55 GMT

வரிசையில் நின்று வாக்களித்தார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  அரவிந்த்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த நிலையில் குருசடியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தனது குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னதாக வாக்கு சாவடிக்கு வந்த அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார், இதே போன்று தனது காவல் பணிக்கு இடையில் குருசடி, புனித அந்தோணியார் மேல்நிலைபள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags:    

Similar News