அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது, ரிட்டயர்டு போலீசார் வேதனை

பண பலன்கள் கிடைக்க விடாமல் செய்து, அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது என ரிட்டயர்டு போலீசார் வேதனை தெரிவித்தனர்.

Update: 2021-08-16 14:45 GMT

ஓய்வு பெற்ற போலீசார் குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீசார் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற போலீசார் பணியில் இருக்கும் காவல் துறையினர் மரணம் அடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும்.

மரண கால உதவிக்காக ஓய்வு பெற்ற காவலர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வரும் தொகை 80 இல் இருந்து 150 ஆக உயர்த்தி பிடித்தம் செய்யப்படும் நிலையில் மரண உதவி தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும்.

காவலர் கேன்டீனில் மருந்து கடை அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை கூறிய ஓய்வு பெற்ற காவலர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் உட்பட எந்த பலன்களையும் கொடுக்காமல் தமிழக அரசானது ஓய்வு பெற்ற காவலர்களுக்கு மிக பெரிய துரோகம் செய்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News