வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்

குமரியில் வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மண்ணுள்ளி பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

Update: 2021-08-09 12:00 GMT

வீட்டினுள் புகுந்த 10 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சார்ந்த மனோஜ் தனது வீட்டில் இருக்கும் போது வீட்டு நாய் வழக்கத்துக்கு மாறாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ் நாய் நின்ற இடத்தின் அருகே சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறத்திலிருந்து ஒரு பாம்பானது வீட்டுக்குள் வந்து கொண்டிருப்பதையும் அதனை நாயானது உள்ளே வரவிடாமல் தடுத்து கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார், பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் சம்பவ இடம் வந்த வனத்துறையினர் பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

அந்தப் பாம்பானது அரியவகை மண்ணுள்ளி பாம்பு என தெரிய வந்தது, தொடர்ந்து சுமார் 10 அடி நீளம் பாம்பு பாதுகாக்கப்பட்ட வனத்தில் விடப்பட்டது.

Tags:    

Similar News