குமரியில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்

Update: 2021-03-27 04:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம். ஆர்.காந்தி மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.பின்னர் காலை 10 மணி அளவில் தோவாளை சந்திப்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

10:30 மணி அளவில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்து பகல் 11.30 மணிக்கு அவர் காவல்கிணறு செல்கிறார். தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அவர் தங்கும் ஹோட்டல் மற்றும் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News