குமரியில் இந்து மகா சபா சார்பில் 508 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

குமரியில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 508 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.

Update: 2021-09-14 12:45 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.

அதன்படி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வீடுகள், வீதிகள், கோவில்களில் பூஜைக்காக வைக்கப்பட்டு நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம்.

இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நபாவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை செய்யப்பட்டதோடு, சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் சிலை கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இந்து இயக்கத்தினர் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்திய நிலையில் கடந்த 4 நாட்களாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 508 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற விசர்ஜன நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தேசிய துணை தலைவர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு முதல் விநாயகரை கரைத்தார்.

தொடர்ந்து முஞ்சிறை, கன்னியாகுமரி, திருவட்டாறு உட்பட மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மற்றும் குளங்களில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

Tags:    

Similar News