சுடுகாட்டு பாதை சேதம் - இறுதிச்சடங்கு செய்வதில் மக்களுக்கு சங்கடம்

குமரியில், மயானத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்ததிருப்பதால், இறந்தவர்களின் உடலைஅடக்கம் செய்ய மக்கள் சங்கடப்படுகின்றனர்.

Update: 2021-09-13 13:45 GMT

குமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சி முடங்கன்விளையில் சேதமடைந்துள்ள மயானப்பாதை. 

கன்னியாகுமரி மாவட்டம் முடங்கன் விளை பகுதியில் சுடுகாட்டுக்கான சாலை சேதமடைந்து காணப்படுவதால், இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்வதில் அப்பகுதிமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து,  முன்னாள் ஊர்த்தலைவர் நிக்கோலஸ் கூறும்போது,  குமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சி முடங்கன்விளையில் இந்து பரதர் சமுதாயத்திற்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சாலை,  இதுவரை மூன்று முறை போடப்பட்டுள்ளது, ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது சாலை முற்றிலும் சேதமடைந்து விடுகிறது.

சாலை சேதமடைந்துள்ளதால், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதில் கடும் சிரமமாக உள்ளது, இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் பஞ்சாயத்து தலைவரும், அரசு அதிகாரிகளும் எங்கள் கோரிக்கையை ஏற்று சுடுகாட்டு சாலையை சீரமைத்து கான்கிரீட் சாலை அமைத்து தரவேண்டும் என்றார்.

Tags:    

Similar News