காெராேனா தடுப்பு நடவடிக்கை: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

குமரியில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-07 14:45 GMT

வெறிச்சாேடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி.

கொரோனா பரவல் மற்றும் ஓமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் உள்ள கடற்கரை, பூங்கா, சூரிய காட்சி கோபுரம் உட்பட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் சொகுசு படகு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், சங்குதுறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News