மிருகங்களின் கொம்புகளாலான கைவினை பொருட்கள் பறிமுதல்; வேட்டை கும்பலுக்கு தொடர்பு

மிருகங்களின் கொம்புகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் தயாரிப்பில் தமிழகம் முழுவதும் பலருக்கு தொடர்பு.

Update: 2021-08-10 12:45 GMT
பறிமுதல் செய்யப்பட்ட யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகளால் ஆன கைவினைப் பொருட்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரத்தில் இரு தினங்களுக்கு முன்பு யானைத்தந்தம், ஆமை ஓடுகள், மான் கொம்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெங்களூருவில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தென்காசியை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வனவிலங்கு வேட்டையாடும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவத்தில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் வனத்துறையினர் தனிப்படை அமைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலும் வேட்டையாடும் கும்பல்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News