குமரியில் வெள்ள சேத பகுதிகளில் மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு

குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

Update: 2021-11-22 14:15 GMT

குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த அதி தீவிர கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது, மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடாக மாறிய நிலையில் அதிகமான பாதிப்புகளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய நிதித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.பி.கவுல், மத்திய நீர் வள ஆராய்ச்சி இயக்க தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குனர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கொண்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறை, வேளான் ஆகிய துறைகளால், மழை வெள்ளத்தில் சேதத்தை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News