கடல் சீற்றத்தால் குமரியில் சுற்றுலா சொகுசு படகு சேவை ரத்து

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக குமரியில் சுற்றுலா சொகுசு படகு சேவை ரத்து ஆனதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2022-01-03 08:15 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு,  கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி சுற்றுலா இடத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,  அந்த தடை விலக்கப்பட்ட நிலையில்,   கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் அதி வேக காற்று காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை படகு சேவையை ரத்து செய்து இருப்பதாக பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ள நிலையில், இதனால் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Tags:    

Similar News