உக்ரைனிலிருந்து வந்த குமரி மாணவர்களை நலம் விசாரித்த பாஜ எம்எல்ஏ

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாணவர்களை காந்தி எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்

Update: 2022-03-07 15:30 GMT

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாவட்ட மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காந்தி எம்எல்ஏ நலம் விசாரித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தீவிரமடைந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு சென்ற இந்திய மாணவ மாணவிகள் அனைவரையும் பத்திரமாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இரு நாடுகள் இடையே பேசி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அழைத்து வரப்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் இல்லங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளும் அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக வந்த நிலையில் அவர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவ மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் நலம் குறித்து விசாரித்தார், இதனிடையே அபாய கட்டத்தை தாண்டி தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த மாணவ மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து உரையாடியது அணைவரின் கவனத்தை ஈர்த்தது.

Tags:    

Similar News