குமரியில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குறித்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-12 15:15 GMT

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பெண் காவல் ஆய்வாளர் வீடு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி.

ஏற்கனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளராகவும் பணியாற்றிய இவருடைய கணவர் சேவியர் பாண்டியன் குமரி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு  கிடைத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் இவருடைய தோழி அமுதா தங்கியிருக்கும் மீனாட்சி கார்டன் பகுதியில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே இவர் மீது லஞ்ச புகார் இருந்து வந்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையில் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News