கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது

Update: 2021-07-20 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதல் அமைச்சர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூபாய் 4000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க ஆணை பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.220 கோடியே 52 லட்சம் நிதி, தமிழக முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News