திருவள்ளுவர் சிலை 22வது ஆண்டு விழா: தமிழ் அமைப்பினர் மலர்தூவி மரியாதை

குமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2022-01-01 14:45 GMT

குமரியில் திருவள்ளுவர் திருவுருவசிலை அமைக்கப்பட்ட 22 ஆவது ஆண்டு விழாவை தொடர்ந்து தமிழ் அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உலகப்பொதுமறை கவிஞன் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் வானுயர சிலை அமைக்கப்பட்டு அந்த சிலையானது கடந்த 2000 மாவது ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டு நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே ஐயன் திருவள்ளுவருக்கு திருவுருவசிலை அமைக்கப்பட்ட 22 ஆவது ஆண்டு விழாவை தொடர்ந்து நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி தலைமையில் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறப்பு அனுமதி பெற்று கடற்கரையில் திருவள்ளுவரின் சிறிய அளவிலான சிலை வைத்து அந்த சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News