வீட்டிற்குள் புகுந்த குட்டி நாக பாம்பை பிடிக்க 2 மணி நேர போராட்டம்

குமரியில் வீட்டினுள் புகுந்த கொடிய விஷமுடைய குட்டி நாக பாம்பு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது.

Update: 2022-02-27 14:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட தெரிசனங்கோப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராகேஷ்வரன். இவரது வீட்டில் சமையல் அறையில் கொடிய விஷமுடைய நல்ல பாம்பு புகுந்து பதுங்கி இருந்தது.

இதனை பார்த்த ராகேஷ் வரனின் குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் வனத்துறையினர் வர தாமதமானதால் ஊர் மக்கள் பாம்பை பிடிக்க ஆயத்தமாயினர்.

ஆனால் பாம்பானது படம் எடுத்து சீறிக்கொண்டு இருந்ததாலும் கொடிய விசமுடைய பாம்பு என்பதாலும் எளிதில் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனிடையே சம்பவ இடம் வந்த வனத்துறையினர் தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி ஊர் பொதுமக்கள் உதவியுடன் அந்த நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரமாக நிலவி வந்த பரபரப்பு ஓய்ந்தது.

Tags:    

Similar News