மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க அனுமதி: மாநகராட்சியில் தீர்மானம்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

Update: 2023-06-29 14:15 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாதாந்திர கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் நடைபெற்ற போது.

பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக விளங்குவது பால். இந்த பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனம் பெறப்பட்டு , பாக்கெட்டுக்களாக முகவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

இது மட்டும் இல்லாமல் ஆவின் நிறுவனம் தயிர் நெய் வெண்ணெய் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகம் அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற ஆவின் பாலகம் திறக்க குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை ஏழை எளிய மக்கள் தொழில் மற்றும்  வாழ்வாதார முன்னேற்றத்திற்காக முகவர்களுக்காக நியமிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட 14 மாற்றுத் திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி கோரி விண்ணப்பங்களுடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரைத்த 14 நபர்களுக்கு ஆவின் பாலகத்திற்கான பங்க் வைத்துக் கொள்ள மற்றும் இதர தொடர்புடைய துறைகளின் தடையில்லா சான்று பெற்று வைத்துக்கொள்ள மாமன்றத்தின் அனுமதி கோரி தீர்மானம் வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேயர் மகாலட்சுமி ஊராட்சி ஆவின் பங்க் வைக்க கூறியுள்ளார்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்களின் சிறப்பினமாக கருதி அதற்கான வாடகை கட்டணங்களிலிருந்து  விலக்களிக்கவும் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ்வகையில் ஓலிமுகமது பேட்டை, ஓரிக்கை, பேருந்து நிலையம் உள்ளே,  ஜவஹர்லால் தெரு,  அரசு தலைமை மருத்துவமனை அருகே, வட்டாட்சியர் அலுவலக வளாகம், ஹாஸ்பிடல் ரோடு,  மிலிட்டரி ரோடு, தும்பவனம்தெரு,  பெரியார் நகர், பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகில்,  பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகில்,  மகளிர் கல்லூரி அருகில் மற்றும் சங்கர மடம் பேருந்து நிறுத்தம் அருகே என 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படுமா ?

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் தேநீர் விடுதிகளும் உணவு விடுதிகளுமே செயல்பட்டு வரும் நிலையில் அரசு நிறுவனம் சார்பில் ஆவின் பாலகம் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News