காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்தனர்.

Update: 2024-10-22 10:30 GMT

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் கடை மூடி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் 500 பேர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ரேஷன் கடை விற்பனை யாளர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்வது , ரேஷன்கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை இறக்கி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிடுதல் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வலியுறுத்தி நேற்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 450 நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி ஊழியர்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் சேரன், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் கண்ணபிரான் ஆகியோரது தலைமையில், மாவட்ட அளவில் 500க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று பங்கேற்றனர்.

இன்று இரண்டாவது நாளாக தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்‌.மேலும் போராட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் நியாயவிலைக் கடைகள் முன்பு ஓட்டப்படாதல் பொதுமக்கள் பலர் வந்து திரும்பி செல்கின்றனர்.

தீபாவளி நெருங்க உள்ள நிலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வருகின்ற நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

Tags:    

Similar News