காஞ்சிபுரத்தில் 43 பழங்குடியினருக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கல்

காஞ்சிபுரத்தில் 43 பழங்குடியினருக்குஆட்சியர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இணைந்து ஓட்டுநர் உரிமம் வழங்கினர்.

Update: 2024-10-21 12:45 GMT

காஞ்சிபுரம் மக்கள் மன்றம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மற்றும் நரிக்குறவர் வாலிபர்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தந்த போது. உடன் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி மற்றும் நரிக்குறவர் இன மக்கள் தங்களது தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற தனியார் பயிற்சி பள்ளிகளின் நாளும் நிலையில் கூடுதல் கட்டணம் கேட்பதால் அவர்கள் அதனை புறக்கணித்துவிட்டு காவல்துறையிடம் அவ்வப்போது சிக்கி அபராதம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போக்க காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பு பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்தை அணுகி உள்ளனர்.

அந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று ஆன்லைன் முறையில் விண்ணப்ப போக்குவரத்து விதிமுறைகளை 2 மணி நேரம் பயிற்சி வகுப்பாக எடுத்து அவர்களுக்கு பழகுநர் உரிமம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஓட்டுநர் உரிமம் 43 நபர்களுக்கு வழங்கிட இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு இருசக்கர வாகன உரிமத்தை அளித்தார்.

இதைப் பெற்றுக் கொண்ட வாகன ஓட்டுநர்கள் மிகுதி அரசு கட்டண செலவிலேயே தங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்தனர்.

மேலும் அரசு போக்குவரத்து விதிகளை கற்றுக் கொண்டதால் வாகன விபத்து இன்றி பயணம் செய்வோம் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது மக்கள் மன்ற நிர்வாகிகள் மகேஷ் , ஜெர்சி , லாரண்ஸ், ஆறுமுகம் உள்ளிட்டவர்  உடன் இருந்தனர்.

Tags:    

Similar News