காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-10 05:30 GMT

பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். 

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் செந்தில் முருகன்,  உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர், உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மேற்படி சம்பவ இடத்தில், நேற்று இரவு தலைமை காவலர்  சந்திரசேகர் உதவியுடன், வாகனங்களை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களை பிடித்து, காஞ்சிபுரம் தாலுகா பொறுப்பு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்து குடியுரிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு 6பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து, 2.5டன் ரேஷன் அரிசி மற்றும் இடத்துக்கு பயன் படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ,  இருசக்கர வாகனம், ஸ்கூட்டி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பார்த்திபன் காஞ்சிபுரம்,  பார்த்திபனின் மனைவி ஜெயந்தி, மலர்,  தரணிதரன், வெங்கடேஷ் ரித்தீஷ் வந்தவாசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News