மோடி தொடங்கி வைத்த திட்ட கல்வெட்டில் எம்.பி, எம்எல்ஏ பெயர்கள் புறக்கணிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் புதியதாக 50 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்படவுள்ளது.

Update: 2024-10-29 12:30 GMT

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்ட நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் எம்பி,எம்எல்ஏக்கள்.

ஒன்பதாவது ஆயுர்வேத தினம் புது டில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேதா மையத்தில் நடைபெற்றது.

இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு மாநிலங்களில், சுகாதார துறைக்கான பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், ஈரோடு, தேனி , ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மொத்தம் 350 படுக்கையறை கூடிய மருத்துவமனைகளை ரூபாய் 151.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ரூபாய் 23 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மூன்று கட்டிடங்களில் 50 தீவிர சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.


இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி குறித்த யூவின் செயலி அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், தமிழகத்தில் ஐந்து இடங்களில் ரூபாய் 151 கோடி மதிப்பீட்டில் புதிய சுகாதாரத் துறைக்கான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகும். இவ்விடம் மத்திய அரசு அறுபது சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்கேற்று இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளது என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டுக் கல்வெட்டினை திறக்க அமைச்சரை அழைத்தனர். அப்போது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கல்வெட்டு திறந்து வைத்தனர். 

அப்போது எம்எல்ஏ செல்வப் பெருந்தகை அந்த கல்வெட்டினை பார்வையிட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் மற்றும் தனது பெயர் என எதையுமே அதில் காணாததை கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து இதனை உற்று நோக்கினார். 

அதன் பின் மேடையை விட்டு இறங்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் இதுகுறித்து அலுவலரிடம் எம்பி எம்எல்ஏ பெயர் இல்லாத கல்வெட்டு எதற்கு என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மத்திய அரசு திட்டம் என்றாலும் அதனை செயல்படுத்துவது மாநில அரசு என்பதும், அதற்காக செயல்படும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எம்எல்ஏ பெயர்களை விடுபட்டது நிச்சயம் ஒரு கண்டிக்கத்தக்க செயலாகும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது மகிழ்ச்சி என்று மட்டும் கூறிவிட்டு பிற கேள்விகளுக்கு அனைத்தையும் புறக்கணித்து சென்று விட்டார்.


Tags:    

Similar News