அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள சங்கரா கலையரங்கில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.சரவணன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிலைய மருத்துவ அலுவலர் ப.சிவகாமி வரவேற்று பேசினார்.
கருத்தரங்கை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தொடக்கி வைத்து பேசுகையில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய் அவசியம் செய்து கொள்ள வேண்டும். அரசு புற்றுநோய் மருத்துவமனையில் இந்த ஆண்டு மட்டும் 1715 பயனாளிகள் மார்பக ஊடுகதிர் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்தரங்கில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது அனுபவங்களை விளக்கி கூறினார்கள்.புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகன் மார்பக புற்றுநோய் குறித்த குறும்படமும் திரையிட்டு விளக்கி கூறினார்.
மருத்துவர் அஸ்வின் மார்பக புற்றுநோய்க்கு முன்பரிசோதனை செய்யும் நவீன கருவி குறித்து விளக்கினார்.
அப்துல்கலாம் கனவு அறக்கட்டளையின் தலைவர் உதயகுமார் புற்று நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டி பேசினார். புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரசன்னா நன்றி கூறினார்.
கருத்தரங்கில் கதிர்வீச்சு சிகிச்சைத்துறை பேராசிரியர் சீனிவாசன் உட்பட மருத்துவர்கள்,அரசு செவிலியர் கல்லூரி மாணவியரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளம்சிவப்பு நிற வண்ண பலூன்களை எம்எல்ஏ எழிலரசன் பறக்க விட்டார்.இதனையடுத்து ரூ.7லட்சம் மதிப்பிலான நோயாளிகளுக்கு பயன்படக்கூடிய பேட்டரி கார் ஒன்றையும் இயக்கி வைத்தார்.புற்று நோயாளிகளுக்கு வினாடி வினாப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.