விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடிய காஞ்சி திமுகவினர்

காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பகுதி கழக செயலாளர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Update: 2024-07-13 09:45 GMT

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:30 மணிக்கு தொடங்கியது.

தொடக்க முதலில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியாக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழந்தார்.

திமுகவின் வெற்றியை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் திலகர் , சந்துர், தசரதன் , திமுக  நிர்வாகிகள்  மலர்மன்னன் , பாண்டியன் என பலர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் பெரியார் தூண் அருகே பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

மேலும் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டினர்.

இதேபோல் வாலாஜாபாத், உத்தரமேரூர் பகுதி நிர்வாகிகளும் முக்கிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Tags:    

Similar News