நீர், கல்வி, மருத்துவம்…எதுவும் அரசிடம் இல்லை: சீமான் அதிரடி பேச்சு!

அரசிடம் இருக்க வேண்டிய நீர், கல்வி, மருத்துவம் மூன்றும் தனியார் வசம் உள்ளது. தற்போது இருப்பது அரசு அல்ல தரிசு,என்று சீமான் பொதுக்கூட்டத்தில் பேசினார்.;

Update: 2025-02-03 07:00 GMT

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியின், நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு பெரியார் நகர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

எத்தனையோ தேர்தலை சந்தித்த நாடு புதுவிதமான தேர்தலை சந்திக்கிறது

எத்தனையோ தேர்தலை நாடு சந்தித்து விட்டது. தற்போது புதுமாதிரியான தேர்தலை சந்திக்கிறது. ஈரோடு கிழக்கில் ஓட்டுக்கு, தி.மு.க.,வினருக்கு, 300 ரூபாய், அ.தி.மு.க.,வினருக்கு, 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். எங்களுக்கு போடாவிட்டாலும் பரவாயில்லை. சீமானுக்கு போடாதீர்கள் என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கேவலமான உதிரி

சில உதிரிகளை வைத்து, ஈ.வெ.ரா.,வை விமர்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் தான் கேவலமான உதிரி. உதிரியோடு தேர்தல் களத்துக்கு வருகின்றீர்கள்.


ஈ.வெ.ரா.,வின் பேச்சை பேசுகிறோம்

ஈ.வெ.ரா.,வை நாங்கள் எதிர்க்கவில்லை. விமர்சிக்கவில்லை. இழிவு செய்யவில்லை. அவர் பேசியதை பேசுகிறோம். ஈ.வெ.ரா.,தான் இழிவு செய்துள்ளார்.ஈ.வெ.ரா.,வை வைத்து, 60 ஆண்டுகள் நீங்கள் செய்த அரசியலை நாங்கள் இப்போது செய்கிறோம். ஈ.வெ.ரா., இல்லாமல் உங்களுக்கு ஒன்றும் இல்லை. அவர் எங்களுக்கு ஒன்றும் இல்லை.

அரசிடம் இருக்க வேண்டிய மூன்றும் தனியார் வசம்

அரசிடம் இருக்க வேண்டிய நீர், கல்வி, மருத்துவம் மூன்றும் தனியார் வசம் உள்ளது. தற்போது இருப்பது அரசு அல்ல தரிசு.துரோகம் செய்தவர்கள் கருணாநிதி, ஈ.வெ.ரா., தான். இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News