கிடுகிடுவென உயர்ந்தது நேந்திர வாழையின் விலை..!பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
ஈரோடு :
புன்செய்புளியம்பட்டி : நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் வட்டாரத்தில் வாழை சாகுபடி
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரத்தில் பெரியகள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம், மற்றும் கதளி, ஜி-9 ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது.
வாழைத்தார் ஏற்றுமதி
இங்கு விளையும் வாழைத்தார்கள், அதிக அளவில் கேரளாவிற்கும், அடுத்தபடியாக மும்பைக்கும் செல்கிறது. நேந்திரன் வாழை, கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நேந்திரன் வாழை பயிரிடும் விவசாயிகள்
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால், சுற்றுவட்டார விவசாயிகள் நேந்திரன் வாழை பயிரிடுவதில், அதிகம் ஆர்வம் காட்டினர்.
நடப்பு ஆண்டின் அறுவடை
நடப்பு ஆண்டுக்கான அறுவடை துவங்கி நடந்து வருகிறது. வாழை விவசாயிகள் கூறியதாவது: நேந்திரன் வாழைத்தார்களை, வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து வெட்டிச் செல்கின்றனர்.கடந்த மாதம், நேந்திரன் வாழை கிலோ, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விலை போனது.தற்போது கிலோ, 65 ரூபாய் வரை விலை போகிறது. இவ்வாறு கூறினர்.