அத்தாணியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அத்தாணியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.27) நடைபெற்றது.;

Update: 2025-01-27 11:30 GMT

அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அத்தாணியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.27) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கருவல்வாடிபுதூரில் உள்ள அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.சங்கீதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சண்முகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ருத்ரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி கிருபை நாதன், செல்வராஜ், காசநோய் சுகாதாரப் பார்வையாளர் சண்முகவடிவு, பகுதி சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, காசநோய் கண்டறியும் நெஞ்சக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அனைவராலும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

Similar News