யானைக்கு கரும்பு வீசிய லாரி டிரைவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

Erode News Today - சத்தியமங்கலம் அருகே யானைக்கு கரும்பு வீசியதாக லாரி டிரைவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-04 07:59 GMT

Erode News Today - சத்தியமங்கலம் அருகே யானைக்கு கரும்பு வீசியதாக லாரி டிரைவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி தாலுக்காவில் உள்ளது ஆசனூர் கிராமம் .சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான ஆசனூர் கிராமம் அதே பெயரில் காட்டுப்பகுதியில் உள்ளது. ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை மூலம் சாமராஜநகர் மற்றும் கோவையுடன் இணைக்கப்பட்டுள்ளது . கிராமத்திற்குள்ளும் அதன் சுற்றுப்புறத்திலும் சில தனியார் ஓய்வு விடுதிகள் அமைந்துள்ளன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ஆசனூர் வனப்பகுதிவழியாக தமிழக- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த ஆண்டு ஆசனூர் வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. அதேபோல்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வட்டத்தில் உள்ள ஆரேபாளையம் கிராம குடியிருப்பு பகுதி வழியாக ஏராளமான காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன் தமிழக கர்நாடக எல்லையான ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்த லாரியை குட்டியுடன் காட்டுயானை ஒன்று வழிமறித்தது. இதனால் லாரியை நிறுத்திய ஓட்டுநர் என்ன செய்வதென்று திகைத்த நிலையில் இருந்தார். அப்போது, லாரியை வழிமறித்து யானைகள் கரும்புகளை சாப்பிட்டது.

சமீபத்தில் 3 மான்கள் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Erode News

இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை ரோந்து பணியை தீவிரப்படுத்தியது. நேற்று வழக்கம் போல் ஆசனூர் வனத்துறையினர் மைசூர் தேசியநெடுஞ்சாலையில் ரோந்து சென்ற போது காரப்பள்ளம் செக்போஸ்டில் இருந்து சிறிது தொலைவில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் அருகில் யானை நிற்பதை கண்ட வனத்துறையினர். உடனே அருகில் சென்று பார்த்த போது லாரி கேபின் மேல் நின்ற படி ஒருவர் யானைக்கு கரும்பு கட்டுகளை வீசி கொண்டிருந்தது தெரியவந்தது.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா கரியபுரா கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சித்தராஜ் என தெரிந்தது. அவரிடம் யானைகளுக்கு கரும்பு போடுவது குற்றம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அவரும் தப்பு தான் என குற்றத்தை ஒப்புகொண்டார். இதையடுத்து ஆசனூர் டிஎப்ஓ உத்தரவின் படி லாரி டிரைவரிடம் இருந்து ரூ.75,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த 2ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News