சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம்

சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-12-20 07:55 GMT

தமிழகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டும் முக்கியமான ஒன்று ஆகும். இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் பூக்களை வியாபாரிகள் வாங்கி செல்வது உண்டு.

இன்று (20-12-2022)  காலை நிலவரப்படி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில்  பூக்களின் விலை நிலவரம் வருமாறு:-

மல்லிகை பூ ஒரு கிலோ-ரூ. 1050/1312

முல்லை ஒரு கிலோ -ரூ. 520/600

காக்கடா ஒரு கிலோ- 400/500

செண்டு ஒரு கிலோ ரூ.10/47

கோழி கொண்டை ஒரு கிலோ ரூ. 15/92

ஜாதி முல்லை ஒரு கிலோ  500/650

கனகாம்பரம் ஒரு கிலோ 400/500

சம்பங்கி ஒரு கிலோ ரூ. 25

அரளி ஒரு கிலோ ரூ. 220

துளசி ஒரு கிலோ ரூ. 40

செவ்வந்தி ஒரு கிலோ ரூ. 80/100

மல்லிகை பூ மற்றும் ஜாதிப்பூ விலை தொடர்ந்து குறையாமலேயே உள்ளது. மல்லிகை பூ தொடர்ந்து கிலோ ரூ. ஆயிரத்திற்கும் அதிகமாகவே உள்ளது. தற்போது கடுமையான பனி காலம் என்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்து விட்டது. உற்பத்தி குறைவின் காரணமாக வரத்து குறைந்ததால்  விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதாகவும், மேலும் தற்போது ஐயப்ப சுவாமி சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் பூஜை புனஸ்காரங்களுக்காக அதிக அளவில் பூக்களை வாங்குவதால் பூக்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், தட்டுப்பாட்டின் காரணமாக தொடர்ந்து அனைத்து பூக்களின் விலை ஏறுமுகத்திலேயே இருப்பதாவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News