சத்தியமங்கலம் பூ மார்க்கெட்; இன்றைய விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,220-க்கு விற்பனையானது.

Update: 2022-10-05 12:45 GMT

இன்று பூக்கள் விலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  1000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள், சத்தியமங்கலம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

மேலும், இங்கு கொண்டு வரப்படும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி கடந்த மூன்று நாட்களாக விற்பனையான பூக்களின் விலை, கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

இன்று (05.10.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.455 ,

முல்லைப்பூ - ரூ.280 ,

காக்கடா - ரூ.325 ,

செண்டுமல்லி - ரூ.100 ,

கோழிக்கொண்டை - ரூ.160 ,

ஜாதிமுல்லை - ரூ.400 , 

கனகாம்பரம் - ரூ.1,220 , 

சம்பங்கி - ரூ.80 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.450.

நேற்று (04.10.2022) விற்பனையான பூக்களின் விலை பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1050 ,

முல்லைப்பூ - ரூ.680 ,

காக்கடா - ரூ.750 ,

செண்டுமல்லி - ரூ.50 ,

கோழிக்கொண்டை - ரூ.125 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.600 ,

சம்பங்கி - ரூ.220 ,

அரளி - ரூ.200 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.400,

நேற்று முன்தினம் (03.10.2022) விற்பனையான பூக்களின் விலை பின்வருமாறு:-

 மல்லிகைப்பூ ரூ.945 ,

முல்லைப்பூ ரூ.880 ,

காக்கடா ரூ.975 ,

செண்டுமல்லி ரூ.40 ,

கோழிக்கொண்டை ரூ.90 ,

ஜாதிமுல்லை ரூ.750 ,

கனகாம்பரம் ரூ.700 ,

சம்பங்கி ரூ.280 ,

அரளி ரூ.350 ,

துளசி ரூ.50 ,

செவ்வந்தி ரூ.360-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், கடந்த வாரம் மல்லிகைப்பூ கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆயுதபூஜையையொட்டி ரூ.1,050-க்கு விற்பனையானது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.415-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,220 என அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்களின் விலை சற்று வீழ்ச்சி அடைந்திருந்தது. தற்போது ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நாட்கள் முடிந்து விட்டதால், வரும் நாட்களில், பூக்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.

Similar News