ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-04-01 13:21 GMT
விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய ஸ்ரீதர் வேம்பு.

ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் மற்றும் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் யு.ஆர்.சி. தேவராஜன், சி.டி.வெங்கடேஸ்வரன், செயலாளர் கணேசன், பொருளாளர் எஸ்.கே.எம். சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சோஹோ தலைமை நிர்வாக அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு பங்கேற்று இளம் தொழில்முனைவோருக்கும், பொறியியல் மாணவர்களுக்கும், தொழில் மற்றும் வணிகப்பிரமுகர்களுக்கும் தகவல் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோட்டில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) குறித்தும், அதனால், மாவட்டத்தில் ஏற்படும் வளர்ச்சி குறித்தும் பேசினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் குறித்த கேள்விகளுக்கு பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு உரிய விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில், ஈடிசியா தலைவர் திருமூர்த்தி, அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலை ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள், சாப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்து இருக்கும் இளைஞ
ர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் கேள்விகளுக்கும் சோகோ தலைமை நிர்வாக இயக்குனர் வேம்பு ஸ்ரீதர் பதில் அளித்தார். இந்த நிகழ்வு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News