இரண்டு கூரை வீடுகளில் தீ விபத்து

பதநீர் காய்ச்சும் அடுப்பிலிருந்து பரவிய நெருப்பினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

Update: 2021-02-12 17:28 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னாரிபாளையம் ஊராட்சி கருதாம்பாடிபுதூர் பகுதியை சேரந்தவர்கள் தனசேகர் மற்றம் பழனிச்சாமி. மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவர்கள் தங்களக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடு அமைத்து அதில் குடியிருந்து வருகின்றனர். அருகில் சிறிய குடிசை அமைத்து பதனீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் சிறிய ஆலையை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று மரம் ஏறி கொண்டுவந்த பதநீர்களை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் பணியில் தனசேகர் மற்றும் பழனிச்சாமி அவர்களது மனைவிகளோடு பணியில் ஈடுபட்டி கொண்டிருந்தனர்.

அப்போது அருகில் இருந்த அவர்களது குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தனசேகர், பழனிச்சாமி மற்றும் அவர்களது மனைவிகள் சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கதில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நம்பியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தினால் தனசேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்களின் இரு கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

விபத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள், சொத்து ஆவணங்கள், துணிகள் உட்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் பழனிச்சாமியின் வீட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் 6 சவரன் கோயில் தங்க நகைகளும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிறுவலூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பதநீர் காய்ச்சும் அடுப்பிலிருந்து பரவிய நெருப்பினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News