ஈரோடு: செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Update: 2023-01-17 06:33 GMT

செவிலியர்கள் (கோப்பு படம்).

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 150 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது:-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 150 செவிலியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு,  இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு, 50 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படமாட்டாது. பணியில்,  சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) , திண்டல், ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638 012. தொலைபேசி எண் - 0424 2431020. என்ற முகவரிக்கு வரும், 27-ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News