நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல் காந்தி
நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார. அப்போது மக்களிடம் மாற்றத்துக்கான மனநிலை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் அதை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியிருந்ததாவது:-
ஐந்தாவது கட்ட வாக்குப்பதின்போது அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் உறுதியாக இருந்து பாரதிய ஜனதாவை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் நான்கு கட்டங்களிலேயே வெளிவாகிவிட்டது இந்த நாடு வெறுப்பு அரசியலால் சலிப்படைந்து இப்போது தனது சொந்த பிரச்சினைகளுக்காக வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடன் சுமையிலிருந்து விடுதலைக்காக விவசாயிகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காக பெண்கள், நியாயமான கூலிக்காக தொழிலாளர்கள் வாக்களிக்கிறார்கள். மக்கள் இண்டியா கூட்டணியுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்கள். நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது .
உங்கள் குடும்பத்தின் செழுமைக்காக உங்கள் சொந்த உரிமைகளுக்காக நாட்டின் வளர்ச்சிக்காக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு அமேதி, ரேபரேலி உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நேற்று தேர்தல் நடந்த ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். எனவே அவர் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது சில வாக்கு சாவடிகளில் அவரை பார்த்த வாக்காளர்கள் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக ரேபரேலியில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.