மனுவில் ரத்தத்தில் கையெழுத்து போட்டு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனுவில் ரத்தத்தில் கையெழுத்து இட்டு முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-16 18:06 GMT

கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் 15,700 வழங்கக் கோரியும், தமிழக கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 வழங்க வேண்டும்.. என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கிராம உதவியாளர்கள் தங்களது ரத்தத்தில் கையெழுத்து இட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வருகிற 24 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் முதலமைச்சர் உடனடியாக கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News