பிளஸ்-1 மாணவன் ஆற்றில் மூழ்கி பலி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-03-29 12:16 GMT

க்ரைம் செய்திகள் (பைல் படம்).

ஆற்றில் மூழ்கி பிளஸ் ௧ மாணவன் உயிரிழப்பு உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். தறிபட்டறை தொழிலாளியான இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் புவனேஷின் உடலை மீட்டனர். 

மூதாட்டி மாயம் 

கோபியை அடுத்த புதுப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கொமராயாள் (83). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து, தனது மகள் பத்மா (55) வீட்டில் கொமராயாள் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கொமராயாள் அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மகள் பத்மா கொடுத்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மயங்கி விழுந்த டெய்லர் பலி

கொடுமுடி தளுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (60). டெய்லர். இவரது மனைவி நிர்மலா (52). இருவருக்கும் திருமணமாகி 35 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ராமசாமிக்கு கடந்த சில வருடங்களாக உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட் டில் இருந்த ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார். கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு| மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News