ராக்கெட் தொழில்நுட்பத்தின் முன்னோடி இந்தியாதான் : இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பெருமிதம்

ISRO Chairman Sivan-ராக்கெட் தொழில்நுட்பம் முதலில் இந்தியாவில்தான் உருவாகியது என்று ஈரோட்டில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

Update: 2022-08-09 08:08 GMT

isro chief shivan speech at erode-ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.

ISRO Chairman Sivan- மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. அங்கு தினமும் மாலை வேளையில் சிந்தனை அமர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும்,திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்தமிழரசனுக்கு 'அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது' வழங்கி இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசினார்.

அவர் பேசும்போது, நான் இஸ்ரோவில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, நாசாவில் இருந்து எனக்கு இலவச கல்வி உதவித்தொகை வந்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. என்னை நாசாவிற்கு அனுப்பவும் தயார் செய்து விட்டனர். எனது பி.எஸ்.எல்.வி. தலைவர் என்னைப்பார்த்து, நீ நாசா போகிறாயா, பி.எஸ்.எல்.வி. ஏவுவதைப் பார்க்க வேண்டுமா எனக் கேட்டார். நான் உடனே நாசா வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

ராக்கெட் தொழில்நுட்பம் உலகில் முதலில் உருவான இடம் இந்தியாதான். திப்புசுல்தான் முதன்முதலில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பகைவர்களை அழிக்க பயன்படுத்தினார். ஆங்கிலேய படைகளை அதுதான் விரட்டி அடித்தது. அதை வெள்ளையர்கள் எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாதான் முன்னோடி. தற்போது உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விண்வெளி தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது.

முன்பெல்லாம் புயல் அடிக்கும் போது பல உயிரிழப்புகள் இருக்கும். ஆனால்,தற்போது செயற்கைக்கோள் மூலம் புயலை முன்கூட்டியே கணித்து குறிப்பிட்ட நேரத்தில் அரசுக்கு சொல்வதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. மீனவர்களுக்கு தற்போது நாங்கள் கொடுத்துள்ள செயலி மூலம் எங்கு அதிக மீன் கிடைக்கும் என்று அறிந்துகொள்கின்றனர். இதனால் மீனவர்கள் அதிக மீன் பிடித்து வர முடிகிறது. மீனவர்கள் சர்வதேச எல்லையைக் கடக்கும்போது அதே செயலி எச்சரிக்கை செய்யும்.

isro chief shivan speech at erode-நாசாவும் இஸ்ரோவும் இணைந்து 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு செயற்கைக்கோளை தயாரித்து வருகிறது. அதன்மூலம் 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பூமியில் நடக்கும் ஒரு செ.மீ. நகர்வைக் கூட கண்டுபிடிக்க முடியும். பூகம்பம், காலநிலை மாற்றம் போன்றவற்றை இது கண்காணிக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News