திராவிட மாடல் திராவிடர்களுக்கு தலைகுனிவு: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கருத்து

திமுக திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்றார் டிடிவி. தினகரன்

Update: 2022-06-09 06:30 GMT

டிடிவி. தினகரன்(பைல் படம்)

ஓராண்டு திமுக திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் மேலும்  கூறியதாவது:  இந்த விடியல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.  ஜெயலலிதா காலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது ரவுடிகள் தைரியமாக உலாவருகின்றனர்.  பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளா.ர் அவர் குற்றச்சாட்டில் தவறு இருந்தால் வழக்கு தொடுக்கலாம. 2ஜி ஊழல் பேசப்பட்டது. இப்போது அது ஜி- ஸ்கொயர் என மாறி உள்ளது.  மக்களுக்குக்கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு ரூ1000 தருவதாக கூறினார்கள். நிறைவேற்றவில்லை.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. இப்போது அது 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிதிநிலை தெரிந்தே பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தன.ர் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. எட்டாண்டு பாஜக ஆட்சியில் நிறை குறைகள் உள்ளன. தமிழகத்துக்கு நல்ல திட்டங்களைத் தரவேண்டும்.

மேகதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது தமிழகத்தில் எதிர்க்கட்சி யார் என்ற கேள்விக்கு அவசியமில்லை. மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே எதிர்க்கட்சி. எங்கள் இலக்கு மீண்டும் அம்மாவின் ஆட்சியை ஏற்படுத்துவதுதான். அதற்கான ஜனநாயக முறையில் போராடி வருகிறோம்.  அதிமுகவின் இணைப்பு குறித்து பேசவில்லை. சசிகலா அதிமுக கட்சி பொதுச் செயலாளராக வழக்கு மன்றத்தில் போராடி வருகிறார். எனது கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளனர். ஆனால் அதை விட திறமையான பலர் கட்சியில் இணைந்துள்ளனர். தொண்டர்களே கட்சியின் பலமாகும்.

மத வெறுப்பு அரசியலை எதிர்க்கிறோம். பாஜகவில் சிலர் அவ்வாறு பேசியதற்காக கட்சி விட்டு நீக்கப்பட்டுள்ளனர் .அதை வரவேற்கிறோம் .பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். எல்கேஜி யுகேஜி நீக்கப்பட்டது குறித்து பெற்றோர்கள் தான் கருத்து கூற வேண்டும். ஈரோட்டில் கரு முட்டை விற்பனை குறித்து போலீஸ் விசாரிக்கிறது. சிபிஐ விசாரணை உடனே கோரமுடியாது .பாராளுமன்றத் தேர்தல் வரும்போது கட்சி நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.  மடியில் கனம இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக திமுக ஆட்சியை விமர்சிக்கவில்லை  என்றார் டிடிவி. தினகரன்.  முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை ,மாவட்ட செயலாளர் சிவபிரசாத் உட்பட பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News