அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3.28 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், மூன்று கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-10 12:30 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், மூன்று கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது.

அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 8,723 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ பருத்தி குறைந்தபட்சமாக 107 ரூபாய் 12 காசுக்கும் அதிகபட்சமாக 124 ரூபாய் 12 காசுக்கும் சராசரியாக 114 ரூபாய் 12 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் 3001.59 குவிண்டால் பருத்தி, 3 கோடியே 28 லட்சத்து 42 ஆயிரத்து 854 ரூபாய்க்கு ஏலம் போனது.

Similar News