காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பவானி கூடுதுறையில் புனித நீராட தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-17 06:45 GMT

பவானி கூடுதுறையில் புனித நீராடிட தடை

ஆடிமாத பிறப்பையொட்டி இன்று பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 3 நதிகள் சங்கமிக்கும் இடமான கூடுதுறையில் நீராடிவிட்டு செல்வர்.இந்தநிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனால், கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டு, இதற்கான அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க முடியாத போதிலும், பொங்கி வரும் காவிரியின் அழகை கண்டு ரசித்த மக்கள் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்து செல்கின்றனர்.மேலும் பவானி- குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மேல் நின்று காவிரி ஆற்றின் அழகை பார்த்து, ரசித்து குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News