ஈரோடு மற்றும் கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-26 11:15 GMT

கோப்புப் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர். ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்) மற்றும் பொறியியல் அல்லாத (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் கட்டிடபட வரைவாளர்) மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்படவுள்ள தொழிற்பிரிவுகளில் (Manufacturing Process Control and Automation, Industrial Robotics and Digital Manufacturing Technician, Basic Designer and Virtual verifier Advanced CNC Machining Technician) சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு Pass/Fail பெற்றவர்கள், காசிபாளையம் மற்றும் கோபிசெட்டிபாளையத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகவும். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூபாய் 750. விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடை பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். 8-ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10-ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10-ம் வகுப்பு. 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சிப் ட்ரெயினிங் உதவித்தொகையுடன் கொடுக்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம். ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: (அசல் மற்றும் நகல்) 8-ம் வகுப்பு/ 10 -ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு முடித்திருப்பின் 9-ம் வகுப்பு ) மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ். சாதி சான்றிதழ், ஆதார் அட்டை. Passport Size photo-4 மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வரவும். ஆன்லைனில் பதிவுக்கட்டணம் ரூ.50 செலுத்த ATM அட்டை /Phone pay /Gpay கொண்டு வரவும். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி வரும் ஜூன் 7-ம் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News