பட்டாசு கடையில் தீ விபத்து..!அதிகாலையில் பரபரப்பு

பட்டாசு கடையில் அதிகாலை 2:30 மணியளவில் பட்டாசு கடைக்குள் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மக்களுடன் இணைந்து தீயை முற்றிலும் அணைத்தனர்.;

Update: 2025-02-10 13:30 GMT

 ஈரோடு : புன்செய்புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையை சேர்ந்தவர் தண்டபாணி, 61; அதே பகுதியில் மளிகை மற்றும் பட்டாசு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு, கடைக்கு பின்புறம் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

அதிகாலை, 2:30 மணியளவில் பட்டாசு கடைக்குள் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வந்த தண்டபாணி மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.

தகவலறிந்து வந்த சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள்  மக்களுடன் இணைந்து தீயை முற்றிலும் அணைத்தனர். துரிதமாக செயல்பட்ட மக்களால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News