2045ல் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகளை காண முடியாது.!

2045ல் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகளை காண முடியாது என லண்டன் பேராசிரியர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-05 11:15 GMT

திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும்போது எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி, டிஎன்பிசிபி மற்றும் யூத்ஹாஸ்டல் அசோசியேஷன், கல்லூரி சுற்றுச்சூழல் கிளப் சார்பில், "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மற்றும் மீண்டும் மஞ்சள் கைப்பை" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம், கல்லூரியில் நடைபெற்றது.

இதில், லண்டனில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பேராசிரியர் இளங்கோவன் சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். பின்னர், அவர் தனது உரையில் தெரிவித்ததாவது, கடந்த 50 ஆண்டுகளில் நமது சுய நலத்தால் இயற்கை வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டன. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியில் பனிப்பாறைகள் 2045ல் காணமுடியாது என் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இது மேலும் 107 டிகிரி செல்சியஸ் வரை உயரும். நிலக்கரி, குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை அதிக அளவில் எரிப்பதும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றும் வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் சுற்றுசூழல் மாசு முக்கிய காரணம்.

தமிழகத்தில் ஆற்று மணல் அகழ்வு அதிகமாக இருந்தது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் அதில் கொட்டப்பட்டன. இப்போது நமக்கு பாட்டில் தண்ணீர் கிடைக்கிறது. எதிர்காலத்தில் அந்த தண்ணீரை பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆபத்தான நிலையில் இருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் விஷக்காற்று வெளியேறும். ஆனால், இன்று வரை விஞ்ஞானிகள் கள் வழங்கி இப்படிப்பட்ட ஒரு புமியை பிரபஞ். சத்தில் கண்டுபிடிக்கவில்லை. அனை வரும் பிரச்சினையை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய வேண்டும். அரசாங்கம் அனல் மின் அலகுகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அல்லது குறைந்த பட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் சோலார் பேனல்களை வழங்குவதன் மூலம் சூரிய சக்தியை ஊக்குவிக்க முடியும். இதனால் புவி வெப்பமடைவதைக் குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News