ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-03-28 14:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

நேற்று (திங்கட்கிழமை) மாவட்டத்தில் 142 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  இந்நிலையில், மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News