கருங்காலி மரத்தின் வியக்க வைக்கும் பலன்கள்..

Ebony Tree in Tamil-கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்களை இந்த செய்தியில் காணலாம்.;

Update: 2023-01-21 04:23 GMT

Ebony Tree in Tamil 

Ebony Tree in Tamil-அபூர்வமான மரங்களில் ஒன்று தான் இந்த கருங்காலி மரம். ஏன் இந்த மரத்தை அபூர்வமான மரம் என்று சொல்கிறார்கள் என்றால், இந்த மரத்தின் ஆற்றலானது சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்குமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த மரம் இது

இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை கோவில் குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். கோவிலின் கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம் .

இந்த மரத்திற்கு எதிர்மறை ஆற்றலை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தால் ஆன சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள். இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி உண்டு. அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் பயன்படுத்திய கைத்தடி கருங்காலி மரத்தால் ஆனது. கெட்ட ஆத்மா தன்னை பின் தொடராமல் இருக்க கருங்காலி மரத்தை பயன்படுத்தினர். தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் பயன்படுத்தினர்.

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆன கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்

காற்று, கருப்பு அண்டாமல் இருக்க, குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க, சிலருக்கு பக்கவாதம் ஒரு கை கால் செயல் திறன் குறைவாக இருந்தால், கை நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருங்காலி கட்டைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மர நிழலில் அடிக்கடி அமர்ந்து கொண்டு இந்த கட்டை ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.

இந்த மரத்தில் தான் உலக்கை செய்வார்கள். உறுதியாக இருக்க பிரபஞ்ச ஆற்றல் உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி அந்த தானியங்களை நாம் உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும். வயதுக்கு வந்த பெண்களின் அருகே இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள். சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள் எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.

அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காயப் போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்கள். பின்பு மனதார வேண்டி கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள் மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே மாதிரி குல தெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்பவர் இதே போல் பொங்கல் வைத்தால் அதற்கு ஒரே ஒரு சின்ன கருங்காலி கட்டை போட்டால் போதும். பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கி வந்தால் குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி மூலம் தலையில் மூன்று முறை லேசாக தட்டி வரவேண்டும். ஒன்பது நாட்களில் குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும். மெதுவாக குச்சியை தலையில் தொட்டு எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பள்ளிகூடத்தில் ஆசிரியர்கள் இந்த குச்சியை தான் அடிக்க பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் குச்சி மாறி விட்டது.

இந்த மரத்தில் தான் ஆதி காலத்தில் கடல் கடந்து செல்லும் படகுகளில் பாய்மரம் கட்டுவார்கள். இடி மின்னல் செங்குத்தான இந்த மரத்தில் இறங்கி கடலுக்கு அடியில் சென்று விடும் அதற்கு தான்.

வீதிகளில் ஜோசியம் குறி சொல்பவர் இந்த மர குச்சியை தான் நம் முன்னே நீட்டி கைகளில் வைத்தும் நம் மன எண்ணங்களை ஈர்ப்பார்கள். இப்போது உங்களுக்கு ஓரளவு இந்த மரத்தை பற்றி புரிந்து இருக்கும் .

கருங்காலி மரத்தின் நன்மைகள்

கருங்காலி மரத்துண்டுகளுடன் தான்றிக்காய் கடுக்காய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல், சளி, இதயபலவீனம், சர்க்கரை வியாதி நீங்கும். இரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள், இந்த கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

இந்த கட்டைகளை எரித்து அந்த சாம்பலை பேய் பிடித்து விட்டது என்கிறார்களே... அது அந்த மன சிதைவு நோய்க்கு நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும்.

இந்த மரம் மிதுனம், மேஷம், விருச்சிகம் ராசிகள் மற்றும் மிருகசீரிஷம் அஸ்வினி அனுஷம் பரணி விசாகம் நட்சத்திரத்தில் கேட்டை பிறந்தவர்களுக்கு, இது உகந்த மரம் இது.

இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை பெற்றவை, இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும். இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம். கோயில்களில் நட்டு வைக்கலாம். மிக நல்லது மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

முருகனுக்கு மிக உகந்த மரம். ஆக மொத்தம் கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வ சக்தி இருக்கும். நல்ல தரமான உண்மையான கருங்காலி மாலைகள் குச்சிகள் விக்ரகங்கள் திரிசூலங்கள் வாங்கி வீட்டில் வைக்கலாம். பண வரவு செல்வ வளம் அதிகரிக்கும். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News