தாராபுரத்தில் நள்ளிரவில் தனியார் பஸ் சிறைபிடிப்பு – பயணிகள் பரபரப்பு!

தாராபுரம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்சில் ஏற முயன்றனர்.;

Update: 2025-05-19 10:40 GMT

தாராபுரத்தில் நள்ளிரவில் தனியார் பஸ் சிறைபிடிப்பு – பயணிகள் மற்றும் உறவினர்களிடையே பரபரப்பு :

தாராபுரம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்சில் ஏற முயன்றனர். பஸ் கிளம்பும்போது ஏறுமாறு கண்டக்டர் மகேஷ்வரன் கூறியதாக தகவல்.

குழந்தைகளுடன் சிலர் இருந்ததால், ஈரோடு வரை டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறியும், கண்டக்டர் ஏற்காததால், அவர்கள் வேறு பஸ்ஸில் ஏறி தாராபுரம் வந்தனர். இதுகுறித்து தாராபுரத்தில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களில் ஒருவர், பா.ஜ., நகரத் தலைவருமான ரங்கநாயகி உள்ளிட்ட பலர், இரவு 12:15 மணியளவில் தாராபுரம் வந்த தனியார் பஸ்சை தடுத்து, கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது பணியில் இருந்த தாராபுரம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். நடத்துனர் வருத்தம் தெரிவிக்கவே மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News