பாரதப்பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து கடலூரில் விழிப்புணர்வு கூட்டம்

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து கடலூர் மாவட்டம் கீழ் குமாரமங்கலம் கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2021-07-30 14:33 GMT

குடிசை வீடுகளில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் ஊரக வட்டார வளர்ச்சி துறை சார்பில் வீடு கட்டும் திட்டத்திற்கான விழிப்புணர்வு கூட்டம் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த காலங்களில் 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதில் கூடுதல் நிதியாக 70 ஆயிரம் ரூபாயும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 27 ஆயிரம் ரூபாய் சேர்த்து சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு தற்பொழுது உயர்த்தி வழங்குகிறது.

இதனை பயன்படுத்தி ஏழை மக்கள் தங்களது குடிசை வீடுகளை பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இவ்விழாவில், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் முகமது யாசின், உதவி பொறியாளர் சீனுவாசன், உதவி வட்டார வளர்ச்சி பொறியாளர் கேசவன், வெங்கடேசன், ரவிசங்கர் இளவரசி கோமதி உள்ளிட்ட துறை பணியாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News