நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா வண்டலுாருக்கு முதலிடம்:முதல்வர் வாழ்த்து

vandalur zoo selected first place in india நாட்டிலேயே வண்டலுார் உயிரியல் பூங்காவானது சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்புக்காக முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-09-11 15:17 GMT

நாட்டிலேயே முதலிடம் பெற்ற  சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.

vandalur zoo selected first place in இந்தியா 

இந்தியாவில் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலுார் உயிரியல் பூங்கா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நிர்வாகம் மற்றும் பராமரிப்பின் அடிப்படையில்  இந்திய நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலுார் அறிஞர் அண்ணா பூங்காவானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.மத்திய சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள பட்டியலில்  82 சதவீத புள்ளிகளைப் பெற்று  வண்டலுார் அறிஞர் அண்ணா பூங்காவானது முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தினை கர்நாடகா ஸ்ரீசமராஜேந்திரா உயிரியல் பூங்காவும்,  குஜராத்தின் சக்கர்பாக் உயிரியல் பூங்கா 3 வது  இடத்தையும் பிடித்துள்ளது.சென்னை வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்காவின் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News